ஞான ராஜசேகரன்
ஞான ராஜசேகரன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இந்திய நிர்வாக சேவையில் ஓர் உயர் அதிகாரியாக கேரளத்தில் பணியாற்றும் இவர் தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் ஆர்வமுடையவர்.[1][2][3]
இளம் வயதிலிருந்தே திரைப்படத்துறை மேல் மிகுந்த விருப்பம் கொண்டவராக இருந்த இவர் குறும்படம் ஒன்றுடன் தான் இத்துறையில் பிரவேசித்தார். எழுதப்பட்ட காலத்தில் சற்று சர்ச்சைகளைத் தோற்றுவித்த தி. ஜானகிராமனின் மோகமுள் நாவலை இவர் முதலில் திரைப்படமாக்கியதும் குறிப்பிடற்குரியது. இத்திரைப்படம் இந்திராகாந்தி தேசிய விருதை தமிழுக்கு பெற்றுத்தந்தது. அடுத்து வில்லன் நடிகராக அறியப்பட்ட சிறந்த நடிகர் நாசர் மேல் நம்பிக்கை வைத்து அவரை கதாநாயகனாக 'முகம்' படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். மகாகவி பாரதியின் வரலாற்றை திரைப்படமாக்கப் போகிறோம் என்று இயக்குனர் பாலச்சந்தர், நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட பலர் அறிவிப்புகள் விட்ட போதிலும் அதனைச் செய்தவர் இவர். தமிழின் மகாகவியான பாரதி பாத்திரத்தில் சாயாஜி சிண்டே என்ற ஒரு மராத்தி நாடக நடிகரை நடிக்க வைத்தார். பெரியாரின் வரலாற்றை நடிகர் சத்தியராஜ்(பெரியார்), குஷ்பூ(மணியம்மையாக) ஆகியோரை வைத்து திரைப்படமாக்கினார்.
நவீன நாடக எழுத்தாளர்
[தொகு]'வயிறு-1978, மரபு-1979, பாடலிபுத்திரம்-1980’ என அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது மூன்று நாடகங்களை எழுதியவர். இம்மூன்று நாடகப் பிரதிகளும் வயிறு என்ற தொகுப்பாக 1980-இல் அகரம் வெளியீடாக வந்தது
இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்
[தொகு]- மோகமுள் (திரைப்படம்)
- முகம் (1999 திரைப்படம்)
- பாரதி (திரைப்படம்)
- பெரியார் (திரைப்படம்)
- ராமானுசன் (திரைப்படம்)
வெளி இணைப்புக்கள்
[தொகு]- ஞான ராஜசேகரனுட்ன் பாரதி படம் பற்றிய நேர்முகம் (ஆங்கிலத்தில்)
- ஞான ராஜசேகரனுடன் திரைப்படங்கள் பற்றிய உரையாடல் (ஆங்கிலத்தில்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Hindu, 26 August 2006, "The known and the unknown", R. Krishanmoorthy [1]
- ↑ https://web.archive.org/web/19961222233122/http://www.webpage.com/hindu/950624/03/2325a.html வார்ப்புரு:Bare URL inline
- ↑ "'Periyar was against Brahminism, not Brahmins'". Rediff. 30 April 2007. https://www.rediff.com/news/2007/apr/30inter.htm. பார்த்த நாள்: 1 August 2020.